Showing posts with label NATURE. Show all posts
Showing posts with label NATURE. Show all posts

Tuesday, 16 September 2014

இயற்கையே நீ



இயற்கையே நீ...

ஆகாய விண்மீன்கள்...
அலைமோதும் கார்மேகம்!
இதமாய் வீசும் இளங்காற்று...
புன்னகைக்கும் பூக்கூட்டம்!
இசையோடு மழைச்சாரல்...
மனம் மயக்கும் மண்வாசம்!
விரல்கள் பதிந்த மணல்மேடு...
பாதம் தீண்டிச்செல்லும் கடலலைகள்!
பனித்துளி படர்ந்த புல்வெளி...
சூடேற்றும் சூரியனின் பொற் கதிர்கள்!
பட்டு வண்ண பட்டாம்பூச்சி...
சிட்டாய் பறக்கும் சிட்டுக்குருவி!
இன்னும் தொடரும்...
இயற்கையின் பயணம்!
செயற்கை செயலிழந்து விடும்...
இயற்கை இறந்து போகுமா?
அறுவியலில் ஆயிரம் முன்னேற்றம்...ஆயினும்
ஆதரவாய் ஆறுதல் தரும்,
இயற்கையே நீ...இன்றும்
இதயத்தில் இனிக்கிறாய்!

ரோஜா மீரான்.