Saturday 9 August 2014

வாடகைத்தாய்



வாடகைத்தாய்

என்னுள்
பல காயங்கள்...
ரணமாய் 
வலித்த போதும்...
கை நீட்டி,
காசை வாங்கிக்கொண்டேன்!
உனை பெற்றெடுக்க ...
பத்து மாதம் சுமந்தபோது,
தாய்மையில் தழைத்துநின்றேன்...
ஈன்றெடுத்து நிமிர்ந்தபோது,
ஈருயிரை ஓருயிராய் கண்டேன்!
மார்பை கவ்வி, பால் குடித்தாய், நீ!
மனம் குளிர்ந்து,மகிழ்ந்துவிட்டேன்,நான்!-உன்னை
அள்ளி எடுத்து அணைத்துகொண்டேன்,
ஆசை தீர முத்தமிட்டேன்...
காசு தந்தவள்,
கையிலெடுத்துகொண்டாள்!
ஈரம் காயாத பால் துளிகள்,உன் இதழில்.
ஈரம் பெருகி,தெறித்து சிதறும்,கண்ணிர் துளிகள்...
என் விழியில்...
ஈன்றெடுத்து, ஈடு செய்ய
ஈட்டும் பொருள் ஏதடா?
காசு கிடக்கிறது...
என் காலடியில்!
ரோஜா மீரான்.


No comments:

Post a Comment